நாடு வெறுப்புணர்ச்சியால் தூண்டப்படும் நேரத்தில் ராகுல் காந்தி அன்பு, அமைதியின் செய்தியை கொண்டு வருகிறார்.. மெகபூபா முப்தி

 
ராகுல் காந்தி

நாடு வெறுப்புணர்ச்சியால் தூண்டப்படும் நேரத்தில் அவர் (ராகுல் காந்தி) அன்பு மற்றும் அமைதியின் செய்தியை கொண்டு வருகிறார் என்று மக்கள் ஜனநாய கட்சியின் தலைவி மெகபூபா முப்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நாளை ஜம்மு அண்ட் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நுழைகிறது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை வரவேற்று, மெகபூபா முப்தியின்  மக்கள் ஜனநாயக கட்சியினர் பல்வேறு பகுதிகளில் பேனர்கள் வைத்துள்ளனர். ஜம்முவின் விமான நிலையத்தின் அருகேயும் ராகுல் காந்தியை வரவேற்று மக்கள் ஜனநாயக கட்சியினர்  பேனர் வைத்துள்ளனர்.

பா.ஜ.க.வின் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு இடம் இல்லை…. மெகபூபா முப்தி ஆவேசம்..

அந்த பேனரை குறிப்பிட்டு பிரபல எழுத்தாளர் சல்மான் அனிஸ் சோஸ் டிவிட்டரில், ஜம்முவில் விமான நிலையத்திற்கு வெளியே ஜம்மு காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு பெரிய பேனர், ராகுல் காந்தியையும், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை வரவேற்கிறது. நன்றி மெகபூபா முப்தி என்று பதிவு செய்து இருந்தார். இதற்கு மெகபூபா முப்தி டிவிட்டரில் பதில் அளித்துள்ளார்.

காங்கிரஸ்

மெகபூபா முப்தி டிவிட்டரில், நாடு வெறுப்புணர்ச்சியால் தூண்டப்படும் நேரத்தில் அவர் (ராகுல் காந்தி) அன்பு மற்றும் அமைதியின் செய்தியை கொண்டு வருகிறார். இந்த காயங்களை குணப்படுத்த அவர் எடுக்கும் முயற்சிகளை வரவேற்கிறோம் என பதிவு செய்து இருந்தார். ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க வருமாறு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவியுமான மெகபூபா முப்திக்கு கடந்த மாதம் காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. காங்கிரஸின் அழைப்பை மெகபூபா முப்தியும் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.