நவம்பர் 15ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய மெகபூபா முப்திக்கு இறுதி நோட்டீஸ்... காஷ்மீர் நிர்வாகம் அதிரடி

 
பா.ஜ.க.வின் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு இடம் இல்லை…. மெகபூபா முப்தி ஆவேசம்..

நவம்பர் 15ம்  தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் தவறினால் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெகபூபா முப்திக்கு காஷ்மீர் நிர்வாகம் இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி ஸ்ரீநகரில் உள்ள பாதுகாப்பு மிகுந்த குப்கர் சாலை பகுதியில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார்.  இந்த சூழ்நிலையில், அண்மையில் அந்த பங்களாவை காலி செய்யுமாறு மெகபூபா முப்திக்கு காஷ்மீர் நிர்வாகம் 2 முறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் மெகபூபா முப்தி அரசு பங்களாவை காலி செய்யவில்லை. 

அரசு பங்களா பகுதி

இந்நிலையில், நவம்பர் 15ம் தேதிக்குள் அல்லது அதற்கு முன் அரசு பங்களாவை காலி செய்யும்படி மெகபூபா முப்திக்கு காஷ்மீர் நிர்வாகம் கடந்த புதன்கிழமையன்று மூன்றாவது மற்றும் இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது மெகபூபா முப்திக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் நிர்வாகம் தற்போது அனுப்பியுள்ள மூன்றாவது மற்றும் இறுதி நோட்டீஸில் கூறியிருப்பதாவது:  

நவம்பர் 15

குறிப்பிட்ட காலத்துக்குள் இந்த உத்தரவுக்கு இணங்க மறுத்தால் அல்லது தவறினால், ஜம்மு மற்றும் காஷ்மீர் பொது இடங்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பளார்களை வெளியேற்றுதல்) சட்டம் 1988ன் பிரிவு 5ன் துணைப் பிரிவு (2)ன் விதிகளின்படி, உங்களுக்கு எதிராகவும், இடத்தை ஆக்கிரமித்துள்ள ஒவ்வொரு நபருக்கும் எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.