காதல் ஜோடியின் சிலைகளுக்கு திருமணம்! குற்ற உணர்ச்சியால் பெற்றோர் செய்த காரியம்

 
l

பெற்றோரின் எதிர்ப்பால் திருமணம் செய்து கொள்ள முடியாத தால் காதலர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  இதனால் குற்ற உணர்ச்சியில் இருந்த பெற்றோர்  காதல் ஜோடியின் சிலைகளை வடிவமைத்து அந்த சிலைகளுக்கு திருமணம் செய்து வைத்து ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். குஜராத் மாநிலத்தில் நடந்திருக்கிறது இப்படி ஒரு விசித்திர சம்பவம்.

 குஜராத் மாநிலத்தில் தாபி பகுதியில் கணேஷ் -ரஞ்சனா என்ற காதலர்கள் தீவிரமாக காதலித்து வந்திருக்கிறார்கள்.  இவர்கள் திருமணம் செய்து கொள்வதாகவும் முடிவெடுத்து இருக்கிறார்கள்.  ஆனால் இரு  வீட்டாரும் அவர்களின் காதலுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.   இரு குடும்பத்தினருமே எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்கள் .

ஜொ

இதனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.   கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த காதல்ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பின்னர் பெற்றோர் அந்த குற்ற உணர்ச்சியிலேயே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.  தங்களால் தானே அவர்கள் சேர்ந்து வாழ முடியாமல் போய்விட்டது என்று மனம் வருந்தி வந்திருக்கிறார்கள்.

 இந்த நிலையில் பெற்றோர் ஒரு முடிவு எடுத்து கணேஷ் - ரஞ்சனா இருவரின் சிலைகளை உருவாக்கி அந்த சிலைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.  இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்ததை பார்த்தோம் . அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காகவும் அவர்களின் ஆசை நிறைவேறுவதற்காகவும் இதை செய்தோம் என்று தெரிவித்துள்ளார்கள்ம்பெற்றோர்.

 தங்களின் எதிர்ப்பால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் காதல் ஜோடி உயிரிழந்து விட்டாலும் அந்த குற்ற உணர்விலிருந்த பெற்றோர் அவர்களின் சிலைகளுக்கு திருமணம் செய்து வைத்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.