திரிபுரா முதல்வராக பதவியேற்றார் மாணிக் சஹா

பிப்லப் குமார் தேப் ராஜினாமா செய்ததை தொடர்ந்து திரிபுராவின் புதிய முதல்வராக மாணிக் சஹா பதவியேற்றார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக திரிபுராவில் ஆட்சி அமைத்தது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலம் திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடத்தி வந்த நிலையில் பாஜக முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. இதன்பிறகு திருவிழாவின் முதலமைச்சராக பிப்லப் குமார் தேப் பொறுப்பேற்றார்.
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் திரிபுராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது இந்த சூழலில் நேற்று திரிபுராவின் முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்தார். உட்கட்சி பூசல் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் கட்சியை வலுப்படுத்த வேண்டிய பணி இருப்பதால் பதவி விலகினேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். அவரது ராஜினாமாவை தொடர்ந்து திரிபுராவின் முதலமைச்சராக மாணிக் சஹா மாநில தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள மாணிக் சஹாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் திரிபுராவின் முதலமைச்சராக மாணிக் சஹா இன்று ராஜ்பவனில் 11:30 மணி அளவில் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திரிபுராவின் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.