மேம்பாலத்தின் மேல் இருந்து பணமழை பொழியவிட்ட நபர்

 
Man throws Rs 10 currency notes from flyover in Bengaluru

பெங்களூரு நகரில் சாலை பாலத்தின் மீதிலிருந்து மக்கள் மீது பத்து ரூபாய் நோட்டுகளை வீசிய அருண் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Money Flying in the Air: Man Throws Rs 10 Currency Notes From Mysuru Road Flyover  in Bengaluru, Video Goes Viral | 📰 LatestLY

பெங்களூரு நகரில் இன்று காலை கே.ஆர். மார்கெட் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் மீது இருந்து கொத்து கொத்தாக இளைஞர் ஒருவர் பத்து ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்து விட்டு தப்பி ஓடினார். மேம்பாலத்தின் கீழ் இருந்த மக்கள், ரூபாய் நோட்டுகளை எடுக்க போட்டா போட்டியிட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதுமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது‌. வீடியோ ஆதாரத்தை கொண்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அருண் என்ற நபரை காவல்துறை அதிகாரிகள் தற்பொழுது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கைது செய்யப்பட்டுள்ள அருண் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தை பெங்களூருவில் நடத்தி வருகிறார். இவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் எதற்காக பணத்தை வீசினார் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.