11 பெண்களை திருமணம் செய்து ஒருவருக்கு தெரியாமல் ஒருவரிடம் குடும்பம் நடத்திய இளைஞர்

 
marriage

தெலுங்கானாவில் 11 இளம் பெண்களை திருமணம் செய்து ஒருவருக்கு தெரியாமல் ஒருவரிடம் குடும்பம் நடத்தி வந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகாரளித்துள்ளார்.

Married 11 Women: He has 11 marriages, marriage craze! Not the virgins, but  the women of Kandava RS News | Reading Sexy News

தெலங்கானாவில் இணையதள திருமண வரன் மூலம் ஒன்றல்ல, இரண்டல்ல 11 இளம் பெண்களை திருமணம் செய்து ஏமற்றியவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஹைதராபாத் சோமாஜிகுடா பிரஸ் கிளப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில்  இரண்டு இளம் பெண்கள் இந்த கல்யாண ராமன் மோசடி குறித்து  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அதில் அவர்கள் கூறுகையில் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பெத்தாம்புடியைச் சேர்ந்த அடப்பா சிவ சங்கர் பாபு என்பவர் திருமண வரனுக்கான இணையத்தின் மூலம்  பல இளம் பெண்களிடம்
பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக முதலில் நம்ப வைத்து இரவு பகல் டூட்டி இருக்கும் என கூறி திருமணம் செய்து கொண்டதாகவும். திருமணத்துக்குப் பிறகு  லட்சக்கணக்கான ரூபாய் பணி நிமித்தமாக  தேவை என கூறி வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.  எங்கு தேடியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. எப்போதாவது மீண்டும் வீட்டுக்கு வந்தால் வாடிக்கையாளரிடம் செல்தாக  கூறி வந்தான்.  திருமணம் என்ற பெயரில் ஏமாற்றி சுமார் 60 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகளை பெற்று சென்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். எந்த வேலையும் இல்லாமல் சிவசங்கர் பாபு வாடிக்கையாளரிடம் செல்வதாக கூறிவிட்டு, வெவ்வேறு மனைவியிடம் சென்று விட்டதாக புகார் தெரிவித்தனர்.  ஏமாற்றப்பட்ட 11 பேரில் 7 பேர் கொண்டாபூர் பகுதியை சேர்ந்தவர்கள். 

பக்கத்து தெருக்களில் மனைவிகளை  வைத்து கொண்டு ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். ஆனால் ஆந்திராவை சேர்ந்த அமைச்சர் ஒருவர் உறவினர் என இருவரிடமும் சிவசங்கர் கூறியதாக கூறப்படுகிறது.  தாங்கள் ஏமாந்தது போல் மற்றவர்களும் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காகவே ஊடகங்கள் முன் வந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.  எனவே சிவசங்கரை  கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். திருமண வரன் இணையத்தின் மூலம்  பல இளம் பெண்களை குறிப்பாக  திருமணமாகி விவாகரத்து பெற்ற இளம் பெண்களை குறிவைத்து, ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் என 11 பேரை திருமணம் செய்து ஏமாற்றி வந்துள்ளான். இதில் ஏமாற்றப்பட்ட இளம்பெண்கள் அனைவரும் உயர்கல்வி படித்து இருந்தும் இந்த கல்யாணராமன் மோசடியில் சிக்கி ஏமாந்து வந்துள்ளனர்.