பா.ஜ.க. தலைவரின் வீட்டில் மின்மினிப் பூச்சி நுழைந்தாலும் மேற்கு வங்கத்துக்கு மத்தியக் குழு அனுப்பப்படுகிறது.. மம்தா பானர்ஜி

 
துர்கா பூஜை கிடையாது என அரசு சொன்னதாக நிரூபித்தால் 101 தோப்புக்கரணம் போடுகிறேன்.. மம்தா பானர்ஜி சவால்

பா.ஜ.க. தலைவரின் வீட்டில் மின்மினிப் பூச்சி நுழைந்தாலும் மேற்கு வங்கத்துக்கு மத்தியக் குழு (சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள்) அனுப்பப்படுகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சாகர்டிகியில் நடந்த நிர்வாக அய்வு கூட்டத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: மத்திய அரசு மேற்கு வங்கத்துக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட நிதியை விடுவிக்கவில்லை. எங்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி பாக்கி உள்ளது. 

பணம்

ஆனால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதியை பெறுகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை செயல்படுத்துவதில் மேற்கு வங்கம் முதலிடத்தில் இருந்தும், ஏன் இத்தகைய பாகுபாட்டை மாநிலம் எதிர்கொள்கிறது? நாங்கள் எந்த மத்திய உதவியும் இல்லாமல் இந்த திட்டத்தை நடத்தி வருகிறோம். 

பா.ஜ.க.

பா.ஜ.க. தலைவரின் வீட்டில் மின்மினிப் பூச்சி நுழைந்தாலும் மேற்கு வங்கத்துக்கு மத்தியக் குழு (சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள்) அனுப்பப்படுகிறது. இது போன்ற குழுக்கள் உத்தர பிரதேசம், டெல்லி அல்லது குஜராத்துக்கு எந்தவொரு சம்பவம் தொடர்பாகவும் ஏன் அனுப்பப்படவில்லை?. மத்திய அரசு அற்ப விஷயங்களுக்கு மத்திய குழுக்களை அனுப்பி மேற்கு வங்கத்தை துன்புறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.