விமானத்தில் குடிபோதையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்?... அகாலிதளம் கருத்துக்கு ஆம் ஆத்மி விளக்கம்

 
பகவந்த் மான்

ஜெர்மனியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குடி போதையில் இருந்ததால் லுப்தான்சா விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதாக  வெளியான அறிக்கைகளை சுட்டிக் காட்டி விளக்கம் அளிக்கும்படி ஆம் ஆத்மி கட்சிக்கு அகாலி தளம் வலியுறுத்தியது.

அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல்,பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மீது கடுமையான  குற்றச்சாட்டுக்ளை முன்வைத்தார். சுக்பீர் சிங் பாதல் தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், ஜெர்மனியில் பிராங்பர்ட்டில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குடி போதையில் இருந்ததால் லுப்தான்சா விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதாக சக பயணிகளை மேற்கோள் காட்டி குழப்பமான  ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. இதனால் 4 மணி நேரம் விமானம் தாமதமானது. இதனால் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய மாநாட்டை தவறவிட்டார் என்ற இந்த அறிக்கைகள் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன.

விவசாயிகளை தேச விரோதிகள் என்று அழைப்பவர்கள்தான் தேச விரோதிகள்… பா.ஜ.க.வை வெளுத்து வாங்கிய சுக்பீர் சிங் பாதல்

இது உலகெங்கிலும் உள்ள பஞ்சாபியர்களை அவமானப்படுத்தியுள்ளது. அதிர்ச்சியூட்டும் வகையில், பஞ்சாப் அரசு, தங்கள் முதல்வர் பகவந்த் மான் சம்பந்தப்பட்ட இந்த அறிக்கைகளுக்கு வாய் திறக்கவில்லை, அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் தெளிவுபடுத்த வேண்டும். இது பஞ்சாபி மற்றும் தேசிய பெருமையை உள்ளடக்கியதால் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பகவந்த் மான் விமானத்திலிருந்து இறக்கப்பட்டிருந்தால், இந்திய அரசாங்கம் ஜெர்மன் அரசிடம் பிரச்சினையை எழுப்ப வேண்டும் என பதிவு செய்து இருந்தார்.

ஆம் ஆத்மி

சுக்பீர் சிங் பாதலின் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி மறுத்துள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் மல்லிவந்த சிங் காங் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் பகவந்த் மான் குறித்து அகாலி தளம் கூறியுள்ள கூற்றுக்கள் தேவையற்றவை, ஆதாரமற்றவை மற்றும் அவதூறு நோக்கத்துடன் செய்யப்பட்ட போலியானவை என்று தெரிவித்தார்.