"மாடியிலிருந்து கீழே விழுந்த தம்பியை காப்பாற்றிய அண்ணன் " - நெகிழ்ச்சி சம்பவம்!

 
tn

இணையத்தில் சில வீடியோக்கள் உடனடியாக வைரலாகி பலரையும் கவர்ந்து விடும்.  அப்படி மாடியில் இருந்து தவறி விழுந்த தம்பியை , அண்ணன் ஒருவர் லாவகமாக பிடித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தை வேகமாக பரவி வருகிறது. 

tn

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் உதலூர் கிராமத்தை சேர்ந்த   சகோதரர்கள் சாதிக் மற்றும் ஷபீக் இருவரும்  சில தினங்களுக்கு முன்பு  தங்களது வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தம்பி  ஷபீக் 
 வீட்டின் மாடியில் ஏறி சுத்தம் செய்து கொண்டிருந்த போது , அண்ணன்  சாதிக்   கீழே  நின்றபடி வேலை செய்து கொண்டிருந்தார்.  அப்போது திடீரென மாடியில் நின்று வேலை செய்து கொண்டிருந்த தம்பி கால் இடறி  கீழே விழுந்தார்.  இதை கண்ட அவரது அண்ணன் சுதாரித்துக் கொண்டு தம்பியை லாபகமாக பிடித்து அவருக்கு சிறு காயம் கூட ஏற்படாதவாறு காப்பாற்றினார்.

tn

 இந்த சம்பவத்தின் போது தம்பியின் எடை தாங்காமல் அண்ணன் கீழே விழுந்தாலும் தம்பியை காப்பாற்றி விட்டோம் என்ற புன்னகை அவர் முகத்தில் அழகாக தென்பட்டது.  இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் பதிவான நிலையில் , அண்ணன் தம்பிக்கு இடையே நடந்த பாச நிகழ்வு பலரையும் கவர்ந்துள்ளது.