மகரவிளக்கு பூஜைக்காலம் நிறைவு - சபரிமலையில் நடை அடைப்பு

 
sabarimala

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில்  நடை அடைக்கப்பட்டுள்ளது. 

sabarimala

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை கடந்த டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற்றது.  இதைத்தொடர்ந்து மகர விளக்கு பூஜையும் நடைபெற்றது.  மகரஜோதி தரிசனம் கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற நிலையில் மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னரும்,  கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

sabarimala

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் நிறைவடைந்துள்ளதால் நடை அடைக்கப்பட்டுள்ளது. ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டதையடுத்து சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் நிறைவடைந்தது.   இன்று காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மன்னர் குடும்பத்தின் பிரதிநிதிகள் சாமி தரிசனம் மேற்கொண்ட நிலையில் கோயில் நடை 7 மணிக்கு சாத்தப்பட்டது. மீண்டும் மாசி மாத பூஜை களுக்காக பிப்ரவரி 12ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும்.மண்டல மகர விளக்கு பூஜை காலத்தில் சுமார் 45 லட்சம் பேர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது