மேடையில் துப்பாக்கி காட்டி டான்ஸ் ஆடிய மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ... மாநில உள்துறை அமைச்சர் அதிரடி நடவடிக்கை

 
சுனில் சரஃப் (கையில் துப்பாக்கி வைத்திருப்பவர்)

மத்திய பிரதேசத்தில் தனியார் நிகழ்வில் ஒன்றில் துப்பாக்கியை காட்டி டான்ஸ் ஆடிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா உத்தரவிட்டார்.

மத்திய பிரதேச மாநிலம் கோட்மா சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் காங்கிரஸின் சுனில் சரஃப். இவர் கொஞ்சம் சர்ச்சைக்குரிய நபர். அண்மையில் தனியார் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுனில் சரஃப், அந்த நிகழ்ச்சியில் துப்பாக்கியை காட்டி நடனமாடியது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில், சுனில் சரஃப் மேடையில் நான்கு பேருடன் நடனமாடும்போது கைத்துப்பாக்கியை வைத்திருப்பதை தெளிவாக காணலாம். இது சுனில் சரஃப்புக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

ஈ.வி.எம். குறித்து திக்விஜய சிங் கேள்வி எழுப்பினால் பா.ஜ.க. வெற்றி பெறுகிறது என்று அர்த்தம்…. நரோட்டம் மிஸ்ரா

இது தொடர்பாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறுகையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க அனுப்பூர் எஸ்.பி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுனில் சரஃப் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில காவல்துறையும் தெரிவித்துள்ளது. சுனில் சரஃப் சர்ச்சைக்குரிய வகையில் செயல்படுவது இது முதல் முறையல்ல. கடந்த அக்டோபரில், ரேவாங்சல் எக்ஸ்பிரஸில் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சுனில் சரஃப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சுனில் சரஃப்

2022 அக்டோபரில் ரேவாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரேவாவில் இருந்து போபாலுக்கு தனது கணவர் மற்றும் ஏழு மாத மகனுடன் ஒரு பெண் பயணம் செய்தார். அதே பெட்டியில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுனில் சரஃப்பும் பயணம் செய்தார். அப்போது, சுனில் சரஃப்பும் மற்றொரு எம்.எல்.ஏ.வும் அந்த பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பெண்ணின் கணவா டிவிட்டர் மூலம் உதவிக்காக காவல்துறையை அணுகிறார். இதனையடுத்து சாகரில் உள்ள ரயில்வே போலீசார் அந்த ரயிலில் ஏறி அந்த பெண்ணின் குடும்பத்துக்கு உதவினார்கள். ரயில் பயணத்தில் சுனில் சரஃப் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.