நாங்கள் எப்போதும் பாகிஸ்தானுடன் இயல்பான அண்டை நாடுகளின் உறவை விரும்புகிறோம், ஆனால்.. வெளியுறவு அமைச்சகம் பதில்

 
அரிந்தம் பாக்சி

இந்தியாவுடன் அமைதி விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் என்று தெரிவித்து இருப்பதற்கு, நாங்கள் எப்போதும் பாகிஸ்தானுடன் இயல்பான அண்டை நாடுகளின் உறவை விரும்புகிறோம் என்று கூறியுள்ளோம். ஆனால் பயங்கரவாதம், விரோதம் அல்லது வன்முறை அல்லாத ஒரு சாதகமான சூழல் இருக்க வேண்டும் என இந்தியா பதில் அளித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடந்த சில தினங்களுக்கு முன் அளித்த பேட்டியில், இந்திய நிர்வாகத்துக்கும், பிரதமர் மோடிக்கும் எனது செய்தி என்னவென்றால், காஷ்மீர் போன்ற எரியும் பிரச்சினைகளை தீர்க்க எங்களை மேசையில் உட்கார்ந்து தீவிரமாகவும் நேர்மையாகவும் பேச அனுமதிக்க வேண்டும். அமைதியாக இருந்து முன்னேறுவது அல்லது ஒருவருக்கொருவர் சண்டையிட்டு, நேரத்தையும் சொத்துக்களையும் வீணடிப்பது அது நம் கையில் உள்ளது. 

ஷெபாஸ் ஷெரீப்

இதுவரை இந்தியாவுடன் மூன்று போர்களை மேற்கொண்டுள்ளோம். போர் தனிநபர்களுக்கு கூடுதல் துன்பம், வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றை மட்டுமே அறிமுகப்படுத்தியது. நாங்கள் இப்போது எங்கள் பாடத்தை கற்றுக் கொண்டோம், நாங்கள் அமைதியாக இருக்க விரும்புகிறோம். ஆனால் அதற்காக எங்கள் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

பாகிஸ்தான்

இந்தியாவுடன் அமைதி விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் என்று தெரிவித்து இருப்பதற்கு, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், நாங்கள் எப்போதும் பாகிஸ்தானுடன் இயல்பான அண்டை நாடுகளின் உறவை விரும்புகிறோம் என்று கூறியுள்ளோம். ஆனால் பயங்கரவாதம், விரோதம் அல்லது வன்முறை அல்லாத ஒரு சாதகமான சூழல் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.