எந்த வார்த்தைகளும் தடை செய்யப்படவில்லை - மக்களவை சபாநாயகர் விளக்கம்

 
Om Birla

நாடாளுமன்றத்தில் எந்த வார்த்தைகளுக்கும் தடை செய்யப்படவில்லை எனவும், எதிர்க்கட்சிகள் தேவையின்றி சர்ச்சையை ஏற்படுத்துகின்றன எனவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார் 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்கவுள்ள நிலையில் மக்களவை,  மாநிலங்களவை என இரு அவைகளிலும்  பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டது. அந்தப் பட்டியலில்   ஆங்கிலம் மற்றும் இந்தி வார்த்தைகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.  அதாவது, “வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக் கூடாத  வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன. மக்களவை செயலகத்தின் இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

rajya sabha

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் எந்த வார்த்தைகளுக்கும் தடை செய்யப்படவில்லை எனவும், எதிர்க்கட்சிகள் தேவையின்றி சர்ச்சையை ஏற்படுத்துகின்றன எனவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்றத்தில் எந்த வார்த்தைகளும் தடை செய்யப்படவில்லை, நீக்கிய வார்த்தைகளின் தொகுப்பை தான் வெளியிட்டுள்ளோம். unparlimentary வார்த்தைகள் முன்பு புத்தகமாக வெளியாகி இருந்தது. காகிதங்கள் வீணாகாமல் இருக்க அவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.