பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ காலமானார்..

 
 பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ காலமானார்..

தெலுங்கு திரையுலகில்  மூத்த நடிகரும்,  முன்னாள் மத்திய இணை அமைச்சருமான கிருஷ்ணம்  ராஜூ என்று அதிகாலை உடல்நலக் குறைவால் காலமானார்.

தெலுங்கு திரையுலகில் ‘ரெபல் ஸ்டார்’ என்று அழைக்கப்பட்டு வந்தவர் கிருஷ்ணம் ராஜு.   பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள இவர் நந்தி விருது உள்ளிட்ட  பல விருதுகளை வாங்கியுள்ளார்.  இவர் கடைசியாக பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  மேலும் கோபி கிருஷ்ணா எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.  சினிமா மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்டிருந்த இவர் கிருஷ்ணம் ராஜு.  1992 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு  போட்டியிட்ட அவர் தோல்வியை சந்தித்தார். இதன் பிறகு பாஜகவில் இணைந்த அவர், 1998 ஆம் ஆண்டு காக்கிநாடா தொகுதியில் எம்.பி., ஆக  போட்டியிட்டார். இதில் மாநிலத்திலேயே அதிக வாக்குகள் பெற்று , அதாவது  சுமார் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

 பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ காலமானார்..

அத்துடன் மதிய அமைச்சரவையின் பல்வேறு கமிட்டிகளிலும் இவர் உறுப்பினராக இருந்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் பாஜகவின் கொறடாவாக  இருந்த கிருஷ்ணம் ராஜு ,  மத்திய இணை அமைச்சராக வெளியுறவுத்துறை பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை தன்வசம் வைத்திருந்தவர்.  இவர் சினிமா,  அரசியல் என தொடர்ந்து ஓய்வின்றி பணியாற்றி வந்தார்.  ராதே ஷ்யாம்  படத்திற்கு பிறகு உடல்நிலை மோசமானதால் சினிமாவில் இருந்து விலகி ஓய்வு எடுத்து வந்தார். ஓய்வுக்கு பின்னர்  மீண்டும் சினிமாவிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர மறைவு திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ காலமானார்..

  கடந்த சில நாட்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.   ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை, நேற்றைய தினம்   மோசமாகி இருக்கிறது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,  இன்று அதிகாலை 3. 25 மணியளவில் அவர் காலமானார்.  தெலுங்கு திரை உலகை சேர்ந்த பலரும் மற்றும்    அரசியல் கட்சி சேர்ந்த தலைவர்களும்  கிருஷ்ணம் ராஜூவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  ஹைதராபாத்தில் கிருஷ்ணம் ராஜுவின் இறுதி ஊர்வலம் இன்று மாலை  நடைபெறும் என்று எ