பிரதமரை துஷ்பிரயோகம் செய்ய எந்த தடையும் இல்லாமல் பேசுபவர்கள் கருத்து சுதந்திரம் பற்றி அழுகிறார்கள்.. கிரண் ரிஜிஜூ

 
கிரண் ரிஜிஜூ

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை துஷ்பிரயோகம் செய்ய எந்த தடையும் இல்லாமல் எப்போதும் பேசுபவர்கள் கருத்து சுதந்திரம் பற்றி அழுகிறார்கள் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.


பத்திரிகை ஒன்றில் ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா அளித்த பேட்டி வெளியாகி இருந்தது. அந்த பேட்டியில், பொதுச் சதுக்கத்தில் நின்று எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னால், நான் சோதனையிடப்படலாம், கைது செய்யப்படலாம் அல்லது காரணமே இல்லாமல் சிறையில் தள்ளப்படலாம். பிரதமரின் முகம் எனக்கு பிடிக்கவில்லை என்று கருத்து தெரிவித்து இருந்தார். இந்த கருத்துக்கள் வைரலாகி விட்டன. சமூக ஊடகங்களில் இதனை குறிப்பிட்டு பலர் மத்திய  அரசை தாக்கினர்.

மோடி

ஓய்வு பெற்ற நீதிபதியின் கருத்துக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலடி கொடுத்துள்ளார்.  கிரண் ரிஜிஜூ தனது டிவிட்டரில் பக்கத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி கூறியதாக  வெளியான செய்தி துணுக்கை ஷேர் செய்து, தொடர்ச்சியான டிவிட்டுகளில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை துஷ்பிரயோகம் செய்ய எந்த தடையும் இல்லாமல் எப்போதும் பேசுபவர்கள் கருத்து சுதந்திரம் பற்றி அழுகிறார்கள். 

கருத்து சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது…ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருகிறது… சோனியா காந்தி தாக்கு

அவர்கள் ஒரு போதும் காங்கிரஸ் கட்சியால் விதிக்கப்பட்ட அவசரநிலை பற்றி பேச மாட்டார்கள், சில பிராந்திய கட்சி முதல்வர்களை விமர்சிக்க ஒரு போதும் துணிய மாட்டார்கள். உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவர் இதை உண்மையான சொன்னரா என்பது எனக்கு தெரியாது. அது உண்மையாக இருந்தால்,  அந்த அறிக்கையே அவர் பணியாற்றிய நிறுவனத்தை இழிவுப்படுத்துகிறது என பதிவு செய்து இருந்தார்.