ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு...அதிர்ச்சி தரும் சம்பவம்!!

 
tn

 ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tn
கேரள மாநிலம் காசர்கோடு செருவத்தூர் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து 30க்கும் மேற்பட்டோர் காசர்கோடு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த சூழலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த 16 வயது மாணவி தேவானந்தா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

tn

உயிரிழந்த மாணவி கண்ணூர் மாவட்டம் கரிவெள்ளூர் – பேரளம் கிராமப் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஈ.வி. பிரசன்னா என்பவரின் மகள் என்று தெரிகிறது.  அத்துடன் மேலும் ஒரு மாணவி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் . அத்துடன் கேரள மாநில உணவு துறை அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற கடைக்கு சென்று உரிமையாளர் மற்றும் பணியாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில்  கெட்டுப்போன சிக்கன் ஷவர்மா விற்பனை செய்யப்பட்டதால்  இத்தகைய சம்பவம் நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து,உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.