சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு கேரள அரசு அறிவுறுத்தல்

 
sabarimala

உலக பிரசித்திபெற்ற அருள்மிகு சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை 1ம் தேதி முதல் தை 6 ஆம் தேதிகள் வரை தொடர்ச்சியாக நடைபெறும் மண்டல- மகர பூஜை உலகளவில் பிரசித்திபெற்றது. இந்த ஆண்டுக்கான சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக கார்த்திகை மாத பிறப்பினை முன்னிட்டு இன்று நடை திறக்கப்பட்டது. சபரிமலை கோயிலின் மேல்சாந்தி, மாளிகைபுரம் கோயில் மேல்சாந்தி, ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் கலச பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. 

Image

இதைத் தொடா்ந்து விரதமணிந்து மாலை அணிந்த ஐயப்ப பக்தா்கள் 18 படி வழியாக ஐயப்பனை தாிசிக்கின்றனா்.  இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதியான இன்று அதிகாலை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.  பெரும்பாலான பக்தர்கள் இன்று முதல் 48 நாட்களுக்கு விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு செல்வது வழக்கம்.  சிலர் இன்றைய தினமே இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.தமிழகத்திலிருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர  முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று முதல்  சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடதக்கது.