அனைத்து சட்ட விரோத செயல்களையும் சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கின்றனர்... பினராயி விஜயன் அரசை சாடிய கேரள கவர்னர்

 
ஆரிப் முகமது கான்

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் அரசு கொண்டுவந்துள்ள பல்கலைக் கழக திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்றும், அனைத்து சட்ட விரோத செயல்களையும் சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கின்றனர் என்று ஆளும் கட்சியை அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் குற்றம் சாட்டினார்.

கேரளாவில் முதல்வர் பினராயி தலைமயிலான இடதுசாரி கூட்டணி அரசு கடந்த சில தினங்களுக்கு முன் அம்மாநில சட்டப்பேரவயைில், பல்கலைக் கழக திருத்த மசோதா மற்றும் லோக் ஆயுக்தா திருத் மசோதா ஆகியவற்றை நிறைவேற்றியது. இந்த மசோதாகளுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்களில் முதல்வர் மற்றும் மாநில அமைச்சர்களின் தகுதியற்ற உறவினர்களை நியமிக்கும் நோக்கில் பல்கலைக்கழக திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக கேரள கவர்னர் குற்றம் சாட்டினார். 

கேரள சட்டப்பேரவை

இது தொடர்பாக  கேரள கவர்னர் ஆரிப் முகமது கான்  கூறியதாவது: நான் எனது கவர்னர் பதவியை துறப்பதாக முன்பே கூறியிருந்தேன். ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் செய்ய விரும்புகிறீர்கள் மற்றும் நான் கையெழுத்திட வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அது சாத்தியமில்லை. இந்த மசோதா மூலம் அனைத்து சட்ட விரோத செயல்களையும் சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கின்றனர். இதை நான் அனுமதிக்க மாட்டேன். இடதுசாரிகள் எதையும் சொல்ல சுதந்திரமாக உள்ளனர். ஆனால் ஒன்றும் மட்டும் நிச்சயம் நான் அழுத்தம் கொடுக்க முடியாது. 

பினராயி விஜயன்

கருப்பு சட்டை அணிந்தவர்களை கைது செய்து அறிக்கை விடலாம், ஆனால் கவர்னர் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். உண்மையில் அரசியலமைப்பு இயந்திரத்தின் வீழ்ச்சியின் ஆரம்பம் அதுதான்.  ஆனால் என் மீது தாக்குதல் நடந்ததால் நான் அதை தொடரவில்லை. நான் யாரிடமாவது வருத்தப்பட்டாலும், எனது முடிவுகளை பாதிக்க நான் அனுமதிக்க மாட்டேன். முடிவுகள் முற்றிலும் தகுதியின் அடிப்படையில் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.