நபிகள் நாயகத்தின் மறைவுக்கு பிறகு இஸ்லாம் மதம் அரசியலால் கைப்பற்றப்பட்டது... கேரள கவர்னர் ஆரிப் முகமது கான்

 
ஆரிப் முகமது கான்

நபிகள் நாயகத்தின் மறைவுக்கு பிறகு  இஸ்லாம் மதம் அரசியலால் கைப்பற்றப்பட்டது என்று கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்பு உடைய பாஞ்சஜன்யா பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் பேசுகையில் கூறியதாவது: குஃப்ர் பத்வாக்கள் உண்மையில் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே அறிவிக்கப்படுகின்றன. அவை அரசியல் ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகின்றன.  

காங்கிரஸ்

காங்கிரஸில் இருந்த காலத்திலிருந்தே எனக்கு எதிராக பத்வாக்கள் சொல்லப்பட்டன. எல்லா சமூகங்களிலும் எப்போதும் இரு கருத்துகள் உள்ளன. ஆனால் அதிகாரம் உள்ளவர்கள் தங்கள் சொந்த கருத்துக்களை பரப்புகிறார்கள். ஆட்சியாளர்களால் மதகுருமார்கள் உருவாக்கப்பட்டனர், அதனால் அவர்களின் (ஆட்சியாளர்கள்) முடிவுகள் மத அங்கீகாரத்தை பெற முடியும். நபிகள் நாயகத்தின் மறைவுக்கு பிறகு  இஸ்லாம் மதம் அரசியலால் கைப்பற்றப்பட்டது. 

குரான் குறித்து சர்ச்சை கருத்து.. ஷியா மத்திய வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவருக்கு வலுக்கும் எதிர்ப்பு

குரானில் குறைந்தது 200 நிகழ்வுகள் உள்ளன. அதில் எது சரி எது தவறு என்பதை படைப்பாளி மட்டுமே தீர்மானிக்க முடியும். மக்கள் இறந்ததும், படைப்பாளரை சந்தித்ததும் இறுதி முடிவு எடுக்கப்படும். குரான் படி இதை முடிவு செய்யும் உரிமை எந்த மனிதனுக்கும், நபிகள் நாயகத்துக்கு கூட வழங்கப்படவில்லை. பத்வா என்பது இஸ்லாமிய மதகுருமார்களால் வழங்கப்பட்ட ஒரு மத ஆணை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.