நான் இங்கு இருக்கும் வரை பல்கலைக்கழகங்களின் சுயாட்சியை பறிக்க அனுமதிக்க மாட்டேன்.. கேரள கவர்னர் உறுதி

 
ஆரிப் முகமது கான்

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரம் குறித்து பேசுகையில், நான் இங்கு இருக்கும் வரை பல்கலைக்கழகங்களின் சுயாட்சியை பறிக்க அனுமதிக்க மாட்டேன் என்று கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் உறுதியாக தெரிவித்தார்.


கேரள மாநில பல்கலைக்கழகங்களில் பணி நியமனங்களில் (துணை வேந்தர்கள் பதவி) தகுதியில்லாத மற்றும் சொந்தபந்தங்களுக்கு வழங்க முயற்சி செய்வதாக கவர்னர் ஆரிப் முகமது கான் குற்றம் சாட்டியிருப்பது அபத்தமானது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் என்று சாடினார். இதற்கு கவர்னர் பதிலடி கொடுத்தார். கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: முதல்வரின் தனிப்பட்ட ஊழியர்களுடன் தொடர்புடையவர்கள் என்பதற்காக தகுதியில்லாத மற்றும் தகுதியற்றவர்களை நியமிக்க அனுமதிக்க முடியாது.

பினராயி விஜயன்

இந்த நிறுவனங்கள் (பல்கலைக்கழகங்கள்) கேரள மக்களுக்கு சொந்தமானது, சிறிய சுருக்கமான அதிகாரம் உடையணிந்தவர்களுக்கு அல்ல. யாராவது தகுதி பெற்றிருந்தால், அவர்கள் மிகவும் வரவேற்கப்படுவார்கள். தகுதியான நபர்களை பொருத்தவரை அவர்களுக்கு எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசாங்கத்துக்கு வழங்க முடியாது. இது நிர்வாக தலையீட்டிற்கு சமம் என்று நான் தெளிவாக கூறுகிறேன். முதல்வர் (பினராயி விஜயன்) எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார் அதல் தலையீடு இருக்காது என்று உறுதியளித்து இருந்தார். இப்போது துணைவேந்தரை நியமிப்போம் என்று முன்மொழிகிறார்கள். இது கல்வி நிறுவனங்களின் சுயாட்சியை பறிக்கும் செயலாகும்.

கேரள பல்கலைக்கழகம்

நான் இங்கு இருக்கும் வரை பல்கலைக்கழகங்களின் சுயாட்சியை பறிக்க அனுமதிக்க மாட்டேன். முதல்வர் வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையை வரவேற்கிறேன். ஏனென்றால் குறைந்தபட்சம் அவர் திரைக்கு பின்னால் இருந்து விளையாட்டை விளையாட முயற்சிக்கவில்லை. இப்போது இர்பான் ஹாபிப் போன்ற பினாமிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, வேந்தரின் உத்தரவை மீறி அவர் கேட்ட சில துணை வேந்தர்களை பயன்படுத்தாமல், குறைந்தபட்சம் இப்போது வெளிப்படையாக வெளியே வந்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.