பணிவுள்ள எவரையும் இழிவாக பார்க்க முடியாது... கேரள கவர்னர் ஆரிப் முகமது கான்

 
ஆரிப் முகமது கான்

பணிவுள்ள எவரையும் இழிவாக பார்க்க முடியாது என கேரள கவர்னா ஆரிப் முகமது கான் தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் காலன் நகரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியை கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் அந்த மாவட்ட கலெக்டர் உமேஷ் பிரதாப் வெர்மா, எம்.எல்.ஏ. ஹரி பிரகாஷ் வெர்மா உள்ளிட்டோரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் பேசுகையில் கூறியதாவது: 

வீடுகளில் விவேகானந்தர் படத்தை தொங்கவிட்டால் இன்னும் 30 ஆண்டுகளுக்கு பா.ஜ.க. ஆட்சிதான்.. திரிபுரா முதல்வர்

நாட்டின் கலாச்சாரத்தை புதுப்பிக்க அனைவரும் உழைக்க வேண்டும், நாம் பின்னோக்கி செல்ல வேண்டும் என்பதற்காக அல்ல, ஆனால் சனாதன் கொள்கைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதற்காக. கல்வி இல்லாமல் இது சாத்தியமில்லை. மனித வாழ்வின் நோக்கம் அறிவை பெறுவது என்றும், பணிவு என்பது அறிவின் விளைவு என்றும் சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். 

கேரள அரசு

பணிவுள்ள எவரையும் இழிவாக பார்க்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் தேசிய நிறுவனங்களின் கண்ணியத்துடன் சமரசம் செய்து கொண்டு நான் (பல்கலைக்கழகங்களின்) வேந்தராக நீடிக்க முடியாது என  கேரள அரசை மறைமுகமாக தாக்கி  கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியிருந்தது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.