கர்நாடக உணவுத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி மரணம்

 
u

கர்நாடக உணவுத் துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பால் நேற்று நள்ளிரவில் மரணம் அடைந்தார்.  மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று இரவு 1.15 மணிக்கு மருத்துவமனைக்கு சென்று உமேஷ் கட்டியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.   இன்று இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

 கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு நடந்து வருகிறது.   இந்த அமைச்சரவையில் வனம் மற்றும் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் உமேஷ் கட்டி(61).   பாஜக மூத்த தலைவரான இவர் பெலகாவி மாவட்டம் உக்கேரி தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 

um

 பெங்களூரு டாலர்ஸ் காலனி இல்லத்தில் வசித்து  வந்தவர் நேற்று அலுவல் முடிந்து வீடு திரும்பி இருக்கிறார்.   வீடு திரும்பிய உமேஷ் கட்டிக்கு இரவு பத்து மணி அளவில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது.   இதை அடுத்து அவரை பெங்களூரு எம். எஸ். ராமையா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  அங்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்தனர்.  இதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.  தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் அவர் க உயிரிழந்தார்.

விவரம் அறிந்த முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று நள்ளிரவு 1:15 மணியளவில் ராமையா மருத்துவமனைக்கு சென்று உமேஷ் கட்டியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.  குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னார்.   தொடர்ந்து அமைச்சர்களும் , எம்எல்ஏக்களும் மருத்துவமனைக்குச் சென்று உமேஷ் கட்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.   மருத்துவமனை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

kc

 மாரடைப்பால் மறைந்த உமேஷ் கட்டியின் உடல் இன்று இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்கள்,  எம்எல்ஏக்கள் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உமேஷ் கட்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 மறைந்த  உமேஷ் கட்டி 9 முறை தேர்தலில் போட்டியிட்டு எட்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  ஆறு முறை இவர் கட்சி மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   வடகர் நாடகத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி அவ்வப் போது போராட்டங்கள் நடத்தி வந்தார்.   கர்நாடக முதல்வராகும் தகுதி தனக்கு இருப்பதாகவும் சொல்லி அடிக்கடி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வந்தார்.