தேர்தல் விதிமீறல்... திரௌபதி முர்முவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

 
திரௌபதி முர்மு

குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் கர்நாடக காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. 

குடியரசு தலைவர் தேர்தல் நடந்து  சில தினங்கள் கழிந்து விட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் கர்நாடக காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. கர்நாடக காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் இந்த புகாரை கொடுத்துள்ளனர்.

காங்கிரஸ்

அந்த புகாரில் திரௌபதி முர்மு, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, பா.ஜ.க. மாநில தலைவர் நளின் குமார் கட்டீல் உள்பட பல பா.ஜ.க. தலைவர்கள் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களையும் இங்குள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைதது, குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிப்பது குறித்து எம்.எல்.ஏ.க்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக அவர்களுக்கு சொகுசு அறைகள், உணவு, மதுபானங்கள் மற்றும் கேளிக்கைகளை அளித்தனர்.

பா.ஜ.க.

பா.ஜ.க. தலைவர்களின் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு (எம்.எல்.ஏ.க்கள்) இந்த வசதிகள் அனைத்தையும் அளித்தன் மூலம், அவர்கள் திரௌபதி முர்முவுக்கு ஆதரவாக வாக்களிக்க தேவையற்ற செல்வாக்கை கொடுத்துள்ளனர். இது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் ஆகும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.