காந்தி குடும்பத்தை வைத்து 3 தலைமுறைக்கு சம்பாதித்துவிட்டோம் - காங்கிரஸ் எம்.எல்.ஏ

 
ramesh kumar

காந்தி குடும்பத்தை வைத்து மூன்று, நான்கு தலைமுறைக்கு சம்பாதித்துவிட்டோம் என கர்நாடக மாநில முன்னாள் சபாநாயகரும், தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான ரமேஷ் குமார் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று ஆஜரானார். அவரிடம் மூன்று மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் திங்கள் கிழமை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ramesh kumar

இதேபோல் கர்நாடகா மாநில காங்கிரஸ் சார்பிலும் நேற்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்று பேசிய கர்நாடக மாநில முன்னாள் சபாநாயகரும், தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான ரமேஷ் குமார், காங்கிரஸ் கட்சியினர் காந்தி குடும்பத்திற்காக தியாகம் செய்வ வேண்டியது கடமை. நேரு, இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் பெயரை வைத்து மூன்று நான்கு தலைமுறைக்கான பணத்தை நாம் சம்பாதித்து விட்டோம். இப்போது இந்த தியாகத்தை கூட அவர்களுக்கு செய்யவில்லை என்றால் அது நியாயமாக இருக்காது என கூறினார்.

ரமேஷ் குமாரின் இந்த கருத்து பெரும் சர்ச்சசையை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் 60 ஆண்டுகாலமாக என்ன செய்தனர் என்பதை அந்த கட்சியின் எம்.எல்.ஏவே ஒப்புக்கொண்டுள்ளதாக பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். சர்ச்சை கருத்தை தெரிவிப்பது ரமேஷ் குமாருக்கு புதிதல்ல. அம்மாநில சபாநாயகராக இருந்த போது, பெண்கள் கற்பழிப்புக்கு ஆளாகும் போது அதனை அனுபவிக்க வேண்டும் என்று ரமேஷ் குமார் கூறியது குறிப்பிடதக்கது.