நாம் சரியான நேரத்தில் எழவில்லை என்றால் நமது தேசியக் கொடியில் சந்திரனின் படம் இருக்கும்... மத்திய பா.ஜ.க. அமைச்சர்

 
கபில் மோரேஷ்வர்

நாம் சரியான நேரத்தில் எழவில்லை என்றால் நமது தேசியக் கொடியில் சந்திரனின் படம் இருக்கும் என்று மத்திய இணையமைச்சர் கபில் மோரேஷ்வர் தெரிவித்தார். 

கர்நாடக காங்கிரஸின் செயல் தலைவர் சதீஷ் ஜார்கிஹோலி, இந்து என்ற வார்த்தை பெர்சியா மொழி என்றும், அது மிகவும் மோசமான அர்த்தம் கொண்ட அர்த்தம் கொண்டது என்றும் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சூழ்நிலையில்,  மகாராஷ்டிராவில் மத நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்த கொண்ட மத்திய இணையமைச்சர் கபில் மோரேஷ்வர் பேசுகையில் கூறியதாவது:  நாம் சரியான நேரத்தில் எழவில்லை (எதிர்த்து நிற்கவில்லை) என்றால் நமது தேசியக் கொடியில் சந்திரனின் படம் இருக்கும். 

தேசியக் கொடி

நாம் சரியான நேரத்தில் எழுந்தால், சந்திரனில் தேசியக் கொடியை ஏற்றலாம். நான் மதம் அல்லது ஜாதி பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. மனித நேயம் மிகப்பெரிய மதம் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் கபில் மோரேஷ்வர் பாட்டீலின் கருத்துக்கு ஏராளமானோர் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கங்களை எழுப்பியபடி கூட்டத்தினர் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். 

சதீஷ் ஜார்கிஹோலி

கடந்த சில தினங்களுக்கு முன் கர்நாடக காங்கிரஸின் செயல் தலைவர் சதீஷ் ஜார்கிஹோலி கூறியதாவது: அவர்கள் இந்து தர்மம் பற்றி பேசுகிறார்கள். இது, இந்து வார்த்தை எங்கிருந்து வந்தது? அது நம்முடையதா? அது பெர்சியா. ஈரான், ஈராக், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ளது பெர்சியா. அதற்கும் பாரதத்துக்கும் என்ன சம்பந்தம்? பிறகு இந்து எப்படி நம்முடையது? இது குறித்து விவாதம் நடத்த வேண்டும்?. இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேசமயம் காங்கிரஸ் கட்சி ஜார்கிஹோலியின் கருத்திலிருந்து விலகி உள்ளது. மேலும் அவரது அறிக்கைகள் துரதிருஷ்டவசமானது என்றும் அதனை நிராகரிப்பதாகவும் தெரிவித்தது.