பொதுமக்கள் விரும்பினால், பா.ஜ.க. எனக்கு சீட் கொடுத்தால் தேர்தலில் போட்டியிட தயார்... நடிகை கங்கனா ரனாவத் அறிவிப்பு

 
கங்கனா அலுவலகம் இடிப்பு.. முதலில் எதிர்ப்பு, பின்பு ஆதரவு… பல்டி அடித்த சரத் பவார்

பொதுமக்கள் விரும்பினால், பா.ஜ.க. எனக்கு சீட் கொடுத்தால் 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட தயார் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்தார்.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அதிரடியான கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர். மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக பேசி விடுவார். கங்கனா ரனாவத் அடிக்கடி மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதனால் கங்கனா ரனாவத் அரசியல் குதித்க போகிறார் என்ற தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட தயார் என்று கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பேட்டியில் ஒன்றில் கூறியதாவது: இன்று வரை என்ன நிலைமை இருந்தாலும், நான் பங்கேற்பதை அரசாங்கம் விரும்புகிறது. நான் அனைத்து வகையான பங்கேற்பிற்கும் மிகவும் தயாராக இருப்பேன். நான் சொன்னது போல் இமாச்சல பிரதேசத்தில் உள்ளவர்கள் எனக்கு சேவை செய்ய வாய்ப்பு கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும். எனவே நிச்சயமாக, அது ஒரு நல்ல அதிர்ஷ்ட விஷயமாக இருக்கும். 

மோடி

பொதுமக்கள் விரும்பினால், பா.ஜ.க. எனக்கு சீட் கொடுத்தால் தேர்தலில் போட்டியிட தயார். 2024 மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட தயாராக உள்ளேன். பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி இருவரும் போட்டியாளர்கள் என்பது வருத்தமளிக்கிறது. ஆனால் தனக்கு ராகுல் காந்தி போட்டியாளர் இல்லை என்பது மோடி ஜிக்கு தெரியும். ஆம் ஆத்மி கட்சியின் பொய்யான வாக்குறுதிகளுக்கு இமாச்சல பிரதேசம் வீழ்ந்து விடாது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த சூரிய சக்தியை கொண்டுள்ளனர். மக்கள் தங்கள் சொந்த காய்கறிகளை வளர்க்கிறார்கள். இமாச்சல பிரதேசத்தில் ஆம் ஆத்மிக்கு இலவசங்கள் வேலை செய்யாது.