100 பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய கல்யாண மன்னன் ‘கான்’

 
ந்

 திருமணமான அந்த 35 வயது வாலிபருக்கு பெண் குழந்தை உள்ளது.  ஆனால் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று சொல்லி வரன் தேடுவதாக நம்ப வைத்து , 100க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி இருக்கிறார்.  இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் இவரால் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  எய்ம்ஸ்  டாக்டர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் டாக்டர் ஒருவர் கான் என்கிற வாலிபர் திருமண பதிவு மையத்தில் தன்னை சந்தித்ததாகவும்,  அங்கு தான் ஒரு அனாதை.  ஆனால் இன்ஜினியரிங் எம்பிபிஏ படித்துவிட்டு சொந்தமாக தொழில் நடத்தி வருவதாகவும் அறிமுகமானார்.   அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் சொன்னார்.   அவருடன் தொடர்ந்து பேசி வந்த போது,   தொழிலை விரிவுபடுத்த பணம் வேண்டும் என்று கேட்டார்.   அதனால் 15 லட்சம் என்னிடம் கடனாக வாங்கி இருந்தார்.   ஆனால் தற்போது என்னை அவர் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிட்டார்.  அவர் மீது சந்தேகமாக இருக்கிறது விசாரித்து அவரை கைது செய்யவும் என்று அவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

ல்

 இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் இறங்கிய போது தான் அந்த திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து இருக்கின்றன . பல போலி ஐடிகளை உருவாக்கி மேட்ரி மோனியல்களில் தனக்கு வரன் தேடுவதாக சொல்லி பல பெண்களை ஏமாற்றி வந்திருக்கிறார்.   மேற்கு வங்காளம், குஜராத், உத்தரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப், கர்நாடகா , மும்பை, ஒடிசா என்று பல மாநிலங்களை சேர்ந்த பெண்களையும் இவர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி வந்தது தெரிய வந்திருக்கிறது.

 அவரின் செல்போன் எண்களை வைத்து தேடிய போது கொல்கத்தாவில் இருந்து பவர் கஞ்சியில் இருக்கும் ஒரு ஓட்டலில் இருப்பது தெரிய வந்தது.  போலீசார் சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர்.   அவரிடம் நடத்திய விசாரணையில் திருமணம் ஆகி ஒரு மகள் மனைவி உள்ளார். தந்தை , சகோதரி ஆகியோருடன் வசித்து வருகிறார்.   ஆனால் பார்க்கும் பெண்கள்,  பழகும் பெண்களிடம் எல்லாம் தன் பெற்றோர் சாலை விபத்தில் இறந்து விட்டதாகவும் ,  தான் ஒரு அனாதை என்றும் சொல்லி நாடகமாடி இருக்கிறார்.  

 இவர்  எய்ம்ஸ் டாக்டரிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்திருக்கிறார்.  மேலும் பல பெண்களிடமும் இவர் பண மோசடி செய்திருக்கிறார் .  பெரும் பணக்காரர் போல்  தொழில் அதிபர் போல் காட்டிக்கொண்டு பெண்களை ஏமாற்றி வந்திருக்கிறார். 

எ

 மேட்ரிமோனியின் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து பின்னர் நேரடியாக பெண்களை பார்க்கும் போது  பணக்காரர் போல தன்னை காட்டிக் கொண்டிருக்கிறார்.  இதில் தான் பெண்கள் பெரும் பணக்காரர் என்று அவரை நம்பி ஏமாந்திருக்கிறார்கள்.   100க்கும் மேற்பட்ட பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது.   

கைது செய்யப்பட்ட வாலிபர் கானிடம் இருந்து   செல்போன்,  நான்கு சிம்கார்டுகள் 9 ஏடிஎம் கார்டுகள் , ஒரு கார்,  கைக்கடிகாரம் ஆகியவற்றை கைப்பற்றி உள்ளனர்.  பெண்களை ஏமாற்றி மோசடி செய்து வந்த கானிடம் மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 வாலிபர் கான் என்பவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் 100க்கு மேல் இருந்த போதும் யாரும் துணிந்து போலீசில் புகார் கொடுக்காமல் இருந்துள்ளனர் எய்ம்ஸ் டாக்டர். புரிந்து போலீஸ் இடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் உண்மை முகம் வெளியே வந்திருக்கிறது.