முழு பலத்தை எட்டியது உச்சநீதிமன்றம்.. இன்று புதிதாக 2 நீதிபதிகள் பதவியேற்பு..

 
Justice Pardiwala, Justice Dhulia take oath as Supreme Court judges


உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று புதிதாக 2 நீதிபதிகள் பதவியேற்றுக்கொண்டனர். இதனையடுத்து மீண்டும் 34 நீதிபதிகளுடன் முழு பலத்தை எட்டியிருக்கிறது உச்ச நிதிமன்றம்..  

கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதான்ஷு  தூலியா, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜேபி பர்திவாலா ஆகியோர் இன்று டெல்லி உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.  இந்த  ஆண்டு கடந்த  ஜனவரி மாதம்  நீதிபதி ஆர் சுபார் ரெட்டி ஓய்வு பெற்றதை அசுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக குறைந்தது.. இதனையடுத்து  உச்சநீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான நீதிபதிகள்   யு.யு.லலிதா, கான்வில்கர், சந்திரசூட், நாகேஸ்வரராவ் அடங்கிய கொலிஜியம், புதிதாக 2 நீதிபதிகளை நியமனம் செய்ய பரிந்துரைத்தது.  

Justice Pardiwala, Justice Dhulia take oath as Supreme Court judges

கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்ற மத்திய சட்ட அமைச்சகம்,  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளான சுதன்ஷு துலியா,   பர்திவாலா ஆகிய 2 பேரையும்   உச்ச நீதிமன்ற நீதிபதியாக  நியமித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது, . இதைத் தொடர்ந்து, இன்று 2 புதிய நீதிபதிகளும்  பதவியேற்று கொண்டனர். நீதிபதிகள் பதவியேற்பு விழா  வழக்கமாக பதவியேற்பு விழா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறையில் நடத்தப்படும். ஆனால் இந்தமுறை ,  உச்ச நீதிமன்றத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரங்கில் ( ஆடிட்டோரியம்  ) நடைபெற்றது.

Justice Pardiwala, Justice Dhulia take oath as Supreme Court judges

இன்று காலை 10. 30 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில்,  நீதிபதிகள் சுதன்ஷு துலியா, பர்திவாலா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவிப் பிரமாணம் செய்து செய்துவைத்தார். இதில்  உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற பா்திவாலா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயா்வு பெற வாய்ப்புள்ளதாகவும்,  2 ஆண்டுகளுக்கு அந்தப் பதவியில் நீடிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  அதேபோல் உத்தரகண்ட் உயா்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாகும்  2-வது நீதிபதி என்கிற பெருமையை பெறுகிறார்   நீதிபதி சுதான்ஷு துலியா.