ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்புக்காக ரூ.9,000 கோடி செலவு

 
jammukashmir

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பிற்காக கடந்த 28 மாதங்களில் 9,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் 2 ஆண்டுகளில் 99 ராணுவ வீரர்கள் பலி- Dinamani

ஒன்றிய உள்துறை அமைச்சகம் 2021ம் ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையை வெளியிட்டது. அதில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக 9 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த 370 சட்டப்பிரிவை ரத்து செய்து உத்தரவிட்டது. 

பாதுகாப்பு நலன் கருதி இதற்கு பிறகு மாநிலத்தின் முக்கியமான தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் மாநிலத்தின் பாதுகாப்பு பலப்படுத்த அதிக அளவிலான ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு லடாக் தனி யூனியன் ஆகவும், 370 சட்டப் பிரிவும் ரத்து செய்யப்பட்டதிலிருந்து இப்போது வரை கிட்டத்தட்ட 28 மாதங்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய அரசு 9,120.69 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. 

இவை தவிர பாதுகாப்பு பணியில் கூடுதல் பணியாளர்களை ஈடுபடுத்த ரிசர்வ் பாதுகாப்பு படையைக்கு கூடுதலாக 5 பட்டாலியன்களும், எல்லைப் பாதுகாப்புப் படைக்கு 2 பட்டலியன்களும் சேர்க்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.