அரசியல் என்பது சித்தாந்தங்களின் சண்டை, தேர்தலில் மட்டும் அரசியல் தொடர முடியாது.. ஜெய்ராம் ரமேஷ்

 
ஜெய்ராம் ரமேஷ்

அரசியல் என்பது சித்தாந்தங்களின் சண்டை, தேர்தலில் மட்டும் அரசியல் தொடர முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தற்போது பஞ்சாபில் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்றார். நடைப்பயணத்துக்கு இடையே ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: பஞ்சாபிலும் எங்களுக்கு மக்களிடம் இருந்து உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது.

நடைபயணத்தின்போது ராகுல் காந்தி

இது சித்தாந்தங்களின் சண்டை, அது நீண்ட காலம் நீடிக்கும். தேர்தல்கள் வரும். நாம் வெற்றி அல்லது தோல்வியை சந்திப்போம், ஏற்றத்தாழ்வுகள் தொடரும். தேர்தலில் மட்டும் அரசியல் தொடர முடியாது. சித்தாந்தமும் முக்கியமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இம்மாதம் 30ம் தேதி ஜம்மு அண்ட் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின்  ஸ்ரீநகரில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நிறைவடைய உள்ளது.

ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், ஒவ்வொரு சவாலையும் எதிர்த்து போராடுவதற்கும், சிக்கலில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கும், சிறந்த நாளைக்காக இன்று மாற்றுவதற்கும் நாங்கள் பொறுப்பேற்றுள்ளோம் என பதிவு செய்துள்ளார்.