சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்த திக்விஜய சிங்கின் கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள்.. காங்கிரஸ் கட்சி விளக்கம்

 
ஜெய்ராம் ரமேஷ்

சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடர்பான மூத்த தலைவர் திக்விஜய சிங்கின் கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள் மற்றும் காங்கிரஸின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்று காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், புல்வாமாவில் நமது சி.ஆர்.பி.எப். வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். சி.ஆர்.பி.எப். அதிகாரிகள், வீரர்களை விமானம் மூலம் அனுப்ப  வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பிரதமர் மோடி ஏற்கவில்லை. எப்படி இப்படி ஒரு குளறுபடி ஏற்பட்டது?. இன்று வரை புல்வாமா தாக்குதல் தொடர்பான எந்த அறிக்கையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. 

2014ம் ஆண்டு முதல் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு எதிரானது.. திக்விஜய சிங்

சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதாக அவர்கள் (மத்திய பா.ஜ.க. அரசு) கூறினர். ஆனால் அதற்கான ஆதாரம் காட்டவில்லை. அவர்கள் பொய்களை மட்டுமே பரப்புகிறார்கள் என தெரிவித்தார். ராணுவத்தின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலுக்கு திக்விஜய சிங் ஆதாரம் கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், திக்விஜய சிங்கின் கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள் மற்றும் காங்கிரஸின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்று காங்கிரஸ் விளக்கம் கொடுத்துள்ளது.
சர்ஜிக்கல் ஸ்டிரைக்

காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில், மூத்த தலைவர் திக்விஜய சிங்கின் கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள் மற்றும் காங்கிரஸின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை. சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2014க்கு முன்பு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசங்கத்தால் நடத்தப்பட்டது. தேசிய நலனுக்காக காங்கிரஸ் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் ஆதரித்துள்ளது மற்றும் ஆதரிக்கும் என பதிவு செய்துள்ளார்.