இன்று முதல் 75 தினங்களுக்கு கோவிட் பூஸ்டர் டோஸ் இலவசம்.. நாட்டுக்கு பிரதமர் மோடியின் பரிசு.. ஜே.பி. நட்டா

 
இனிதான் ஆட்டம் ஆரம்பம்.. குடும்ப அரசியல் நாட்டிற்கு கேடு.. - பிரதமர் மோடி கடும் தாக்கு..

இன்று முதல் 75 தினங்களுக்கு இலவச கோவிட் முன்னெச்சரிக்கை டோஸ்கள் (பூஷ்டர் தடுப்பூசிகள்) இந்தியாவிற்கு பிரதமர் மோடியிடமிருந்து பரிசு என பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு ஜூலை 15ம் தேதி (இன்று) முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் கோவிட் பூஷ்டர் டோஸ் (தடுப்பூசி) இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் இலவச கோவிட் முன்னெச்சரிக்கை டோஸ்கள் (பூஷ்டர் தடுப்பூசிகள்) இந்தியாவிற்கு பிரதமர் மோடியிடமிருந்து பரிசு என பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

ஜே.பி. நட்டா

பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா டிவிட்டரில், ஜூலை 15ம் தேதி (இன்று) முதல் அடுத்த 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்கப்படும். நமது சுதந்திரத்தின் 75வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் நமது பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அளித்துள்ள பல பரிசுகளில் இதுவும் ஒன்றாகும். மேலும், ஒவ்வொரு குடிமகன் மீதும் அவர் காட்டும் அக்கறைக்கு சான்றாகும் என பதிவு செய்துள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண் (கோப்புப்படம்)

சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் தீவிரமாக உள்ளது. அதேசமயம் நம் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருக்கிறது. இருப்பினும் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், இன்று முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் கோவிட் பூஷ்டர் டோஸ் (தடுப்பூசி) இலவசமாக வழங்கப்படப்பட உள்ளது. இதனை தகுதியான அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.