இலங்கை போராட்டத்தைக் கட்டுப்படுத்த இந்திய ராணுவம் களமிறக்கப்படுகிறதா??

 
இலங்கை போராட்டத்தைக் கட்டுப்படுத்த இந்திய ராணுவம் களமிறக்கப்படுகிறதா??

இலங்கையில் மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த  இந்திய ராணுவம்  களமிறக்கப்படுவதாக வெளியான  தகவலை,  தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலன்ங்கை மக்கள் , கடந்த 3 மாதங்களாக  அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.  நேற்று முன்தினம் லட்சக்கணக்கான மக்கள் தலைநகர் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  அப்போது பாதுகாப்பு தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைகள் நுழைந்ததால் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்தது. இதனையடுத்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே,  அதிபர் மாளிகை விட்டு குடும்பத்துடன் தப்பியோடினார். அவர் கப்பலில் ஏறி வெளிநாடு தப்பி சென்று விட்டதாகவும், ராணுவ  தளத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும் பல்வேறு வதந்திகள் கூறப்படுகின்றன.  ஆனாலும் அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இலங்கை போராட்டத்தைக் கட்டுப்படுத்த இந்திய ராணுவம் களமிறக்கப்படுகிறதா??
 அதே நேரம் அதிபர் மாளிகைக்குள் நுழைந்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மாளிகையை தங்கள் வசம்  கொண்டு வந்தனர்.  அங்கேயே தங்கி  நீச்சல் குளங்களில்  குளித்தும்,  அங்கிருந்த  படுக்கையறை மெத்தைகளில் பயன்படுத்தியும்,  சமையலறையை பயன்படுத்தியும் அவர்கள் மகிழ்ந்து வந்தனர்.  போராட்டம் என்று மூன்றாவது நாளை எட்டி இருக்கும் நிலையில் போராட்டக்காரர்கள்,  அதிபர் மாளிகையை விட்டு இன்னும் வெளியேறவில்லை.  புகைப்படம் எடுப்பது,  உணவு அருந்துவது என சுற்றுலா தளம் போல் பயன்படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்கவும்,  அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக ராஜபக்சேவும் அறிவித்த பின்னரும் மக்கள் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.  சொல்லப்போனால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.   

இலங்கை போராட்டத்தைக் கட்டுப்படுத்த இந்திய ராணுவம் களமிறக்கப்படுகிறதா??

இந்த நிலையில் இலங்கை போராட்டத்தை கட்டுப்படுத்த இந்திய ராணுவத்தை அனுப்பவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி இருந்தது .  ஆனால் இந்த தகவலை இந்திய தூதரகம் திட்டவட்டமாக  மறுத்துள்ளது.   இது போன்ற கருத்துக்கள் இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு எதிரானது என்று,  இந்திய தூதரக உயர் அதிகாரி கூறியுள்ளார்.  முன்னதாக மத்திய வெளியுறத்துறை அமைச்சக  செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும்,  இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்கும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.  இலங்கையும் , அந்நாட்டு  மக்களும் எதிர்கொள்ளும் பல சவால்களை இந்தியா அறிகிறது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.