ஆடை அணியாமல் இருப்பதும் அடிப்படை உரிமைதானே? உச்சநீதிமன்றம் தடாலடி

 
df

ஆடை அணிவது என்பது எப்படி உரிமை என்று எப்படி சொல்கின்றோமோ அதே போல் ஆடை அணியாமல் இருப்பதும் கூட அடிப்படை உரிமைதானே என்று கேட்கிறது உச்ச நீதிமன்றம்.

 கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.   இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்குதல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.,

 மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் தலையில் துணியை கட்டிக் கொள்வது அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்று மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்ட போது நம் நாட்டை எதற்காக அமெரிக்காவுடன் கனடாவுடன் ஒப்பிட வேண்டும் .  நாம் பழமையானவர்கள் என சொல்லியதோடு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் பொழுது அது சமூக கலாச்சார சூழல்களையும் சார்ந்தது என்றும் தெரிவித்துள்ளார். 

s

  ஆடை அணிவது என்பது எப்படி அடிப்படை உரிமையோ அதேபோல் ஆடை இல்லாமல் இருப்பதும் அடிப்படை உரிமை தான் என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

 சிலுவை,  ருத்ராட்சம் போன்றவை மத அடையாளங்கள் தான்.  அவற்றை அணிந்து கொள்ளும் மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு வரும் பொழுது ஹிஜாப்பிற்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வாதம் வைத்தபோது,  சிலுவையும் ருத்ராட்சமும் ஆடைக்கு உள்ளே மறைக்கப்படுகிறது . அதை வெளியே தெரிவதில்லை.   அதே நேரத்தில் வேறு யாரேனும் அவர்களுடைய சட்டையை கழற்றி இவற்றை சோதிப்பது இல்லை .  ஆனால் ஜிஜாப் என்பது வெளியே தெரியக் கூடியதாக இருக்கிறது என நீதிபதி கிட்ட குறிப்பிட்டார்.

வெளியே தெரிகிறதா இல்லையா என்பது விஷயம் அல்ல.    கல்வி நிலையங்களில் மத அடையாளங்கள் அணிந்து வரக்கூடாது என்று அரசு சொல்லும்பொது  அனைத்து மதத்திற்கும் அது பொருந்தக்கூடியதாக  இருக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.   இதன்பின்னர் வழக்கின் மறு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர்.