7 பேரின் உயிரை பறித்த ஒரு தலைக்காதல்!

 
 Indore complex fire kills 7

மத்திய பிரதேசம் இந்தூரில் ஒருதலைக்காதலால் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூர் விஜய் நகரில் உள்ள ஸ்வர்ணா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் பெண்ணை ஷுபம் தீட்சித், என்பவர் ஒரு தலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. அப்பெண்ணிடம் காதலை தெரிவிக்க அவரது வீட்டுக்கு சென்றார் தீட்சித். வீட்டுக்கு வெளியே இருவரும் பேசிக்கொண்டிருந்த போது தீட்சித்தின் காதலை அப்பெண் ஏற்க மறுத்ததால் அவரது ஸ்கூட்டிக்கு தீயை வைத்துவிட்டு அங்கிருந்து சென்றார். அந்த தீ அடுக்குமாடி குடியிருப்பு அருகில் இருந்த கூரை வீடுகளில் பற்றியது. 

அங்கு தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் தீயில் எரிந்து நாசமாகினர்.மேலும் 3 பேர் தீ மற்றும் புகைமூட்டத்தால் ஏற்பட்ட மூச்சுத்திணறால் உயிரிழந்தனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து அருகில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் இளைஞரின் செயல் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து தீட்சித்தை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.