அவசரமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்..

 
indigo


இந்தியாவின் இண்டிகோ விமானம், பாகிஸ்தானின் கராச்சியில்  அவசரமாக தரையிரக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஐக்கிய  அரபு அமீரகத்தின்  ஷார்ஜாவில் இருந்து தெலங்கானா மாநிலம்  ஹைதராபாத்துக்கு  130 பயணிகளுடன் இன்று காலை இண்டிகோ விமானம் ஒன்று  வந்துகொண்டிருந்தது.  பாகிஸ்தான் எல்லையில் விமானம் வந்து கொண்டிருந்த போது,  திடீரென  இண்டிகோ விமானத்தில்  தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானம் பறப்பதில் சிக்கல் இருப்பதை உணர்ந்த விமானி, உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.  இதனையடுத்து  பாகிஸ்தானில் விமானத்தை தரையிறக்க  அந்நாட்டு அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டது.  

 அவசரமாக  பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்..

இந்திய அரசாங்கமும் பாகிஸ்தான் அரசிடம்  இதுதொடர்பாக பேசியது.  பின்னர் பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்ததை அடுத்து,   கராச்சி விமான நிலையத்தில்  அவசரமாகத்  விமானம் தரையிறக்கப்பட்டது.   பின்னர் விமானத்தில்  பயணித்த பயணிகள், விமான நிலையத்தில் இருந்த அறைகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.   பின்னர் மற்றொரு விமானம் கராச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டு அந்தப் பயணிகளை ஹைதராபாத்து அழைத்துச் சென்றது.  

 அவசரமாக  பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்..

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு தெரிவித்த ஸ்பைஸ்ஜெய் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங்,  பாகிஸ்தானில் விமானம் தரையிறங்குவது என்பது எளிதான விஷயம் அல்ல என்றும்,   இதற்கு அனுமதி கொடுக்க அந்நாட்டு அரசங்கம் மிக நீண்டநேரம் எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்தார்.  மேலும் இது மிகவும் வருத்தத்திற்குரியது என்றும்,  இந்திய விமானம் என்பதால் தான் இவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும்  அவர் கூறினார்.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கராச்சியில் இந்திய விமானம் தரையிரங்குவது இது  இரண்டாவது முறையாகும்..  ஏற்கனவே  இதற்கு முன்பு டெல்லியிலிருந்து துபாய்க்குச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் இண்டிகேட்டர் விளக்கு செயலிழந்ததை அடுத்து, அப்போதும் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.