ஒரேநாளில் 3,377 பேருக்கு கொரோனா...அதிர்ச்சியில் மத்திய, மாநில அரசுகள்!!

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,377 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது கடந்த சில வாரங்களாக மீண்டும் உயர தொடங்கி விட்டது. இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு, மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தமிழகம், டெல்லி, உ.பி. பஞ்சாப் உள்ளிட்ட பல மாவட்டங்களில் முக கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொது மக்கள் தடுப்பு நடவடிக்கைளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,377 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 2,483 பேருக்கும், நேற்று 3,303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதன் மூலம் இந்தியாவில் நேற்றை காட்டிலும் கொரோனா அதிகரித்துள்ளதுடன், கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 72 ஆயிரத்து 176 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 60 பலியாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,23,753 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4, 25, 30,622 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் 17,801 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் கொரோனாவிற்கு எதிரான ஆயுதமாக பார்க்கப்படும் தடுப்பூசியானது இதுவரை 188. 65கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.