எகிறும் கொரோனா பாதிப்பு - இந்தியாவில் தினசரி பாதிப்பு 3000ஐ தாண்டியது

 
Covid Positive

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3,303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில், கடந்த ஒருவார காலமாக அதன் எண்ணிக்கையானது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மீண்டும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கொரோனா 4ஆம் அலை ஜூன் மாதம் ஏற்படக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்த நிலையில் மக்கள், அலட்சியம் காட்டாமல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Corona

இந்நிலையில்  கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த இரண்டு நாட்களை விட அதிகமாகும். நேற்று 2,927  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம்   2,483 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.   இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா தொற்றுக்கு 39   பலியாகியுள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,23,693 ஆக அதிகரித்துள்ளது.  இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 2563 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில்,  கொரோனாவிலிருந்து மொத்தம்  குணமடைந்தோர் எண்ணிக்கை 4, 25, 28,126 ஆக உயர்ந்துள்ளது.  தற்போது வரை இந்தியாவில் 16,980 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் கொரோனாவிற்கு எதிரான ஆயுதமாக பார்க்கப்படும் தடுப்பூசியானது இதுவரை 188.40 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.