இந்தியாவில் குறைய தொடங்கியது கொரோனா பாதிப்பு!!

 
corona death

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் குறைய தொடங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நேற்று முன்தினம் 3,805 பேருக்கும், நேற்று  3,451  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது .  இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 5ஆயிரத்து 401 ஆக அதிகரித்துள்ளது. 

corona

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா தொற்றுக்கு 29 பேர்  பலியாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் ஏற்பட்ட  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,24, 093ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை கொரோனாவிலிருந்து மொத்தம்  குணமடைந்தோர் எண்ணிக்கை 4, 25, 60,905ஆக உயர்ந்துள்ளது.  

tn

தற்போது வரை இந்தியாவில் பேர் 20,403 கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் கொரோனாவிற்கு எதிரான ஆயுதமாக பார்க்கப்படும் தடுப்பூசியானது இந்தியாவில் மேலும் 13,50,622 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 190.34 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.