ஒரேநாளில் 21,566 பேருக்கு கொரோனா - இந்தியாவில் 200.91கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது!!

 
corona

இந்தியாவில் புதிதாக  21,566  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

corona

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்,  21,566 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த  எண்ணிக்கை 43,825,185 ஆக உள்ளது.   இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா பாதித்த 18,294 பேர் குணமடைந்த நிலையில் , கொரோனாவிலிருந்து மொத்தம்  குணமடைந்தோர் எண்ணிக்கை  43,150,434  ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் 1,48,881 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

india corona
கடந்த 24 மணி நேரத்தில்  29,12,855 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 200.91 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  தினசரி கொரோனா பாதிப்பு விகிதம்  4.25% ஆகவு பதிவாகி வருகிறது.