மீண்டும் 20,000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு

 
india corona

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 20,000ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த 2 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைவான அளவிலேயே பதிவாகி வந்தது.  நேற்று முன் தினம் 17, 135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில்,  நேற்று 19,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,   கடந்த 24 மணி நேரத்தில் 20,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த  எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்தை தாண்டியுள்ளது. அத்துடன் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24மணிநேரத்தில் 70 ஆக பதிவான நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை  5,26,600 ஆக அதிகரித்துள்ளது.

covid

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிலிருந்து 21,595 குணமடைந்துள்ள நிலையில், மொத்தம்  குணமடைந்தோர் எண்ணிக்கை  4.34 கோடியாக ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் 1,35,364 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதேபோல் தினசரி பாதிப்பு விகிதம் 5.14 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36.95 லட்சம்  பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 205 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.