மீண்டும் 18 ஆயிரத்தை தொட்டது கொரோனா பாதிப்பு - 57 பேர் உயிரிழப்பு!!

 
Covid Positive

இந்தியாவில் கடந்த 2 நாட்களை காட்டிலும் கொரோனா பாதிப்பு இன்று அதிகரித்துள்ளது.

corona

அந்த வகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்,  18,313 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று  14,830 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது  கொரோனா பாதிப்பு 18 ஆயிரமாக உயர்ந்துள்ளது.  இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த  எண்ணிக்கை 43,938,764ஆக உள்ளது.   ஒரேநாளில்  57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதுவரை தொற்றால்  பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 5,26,167ஆக அதிகரித்துள்ளது.

corona

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா பாதித்த 20,742  பேர் குணமடைந்த நிலையில் , கொரோனாவிலிருந்து மொத்தம்  குணமடைந்தோர் எண்ணிக்கை  43267571  ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில்  1,45,026  பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கடந்த 24 மணி நேரத்தில்  27,37,235 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 202.79 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 4.31% ஆகவு பதிவாகி வருகிறது.