இந்தியாவில் குறைந்தது கொரோனா - இன்றைய நிலவரம் இதோ!!

 
corona

இந்தியாவில் கொரோனா வீரியம் வெகுவாக குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். இருப்பினும் அண்மை காலமாக கொரோனா தினசரி பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மீண்டும் கொரோனா வேகமெடுத்து மக்களை வெகுவாக பாதிக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இருப்பினும் இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

corona

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்,  14,830 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 16,866  பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது  கொரோனா பாதிப்பு 14 ஆயிரமாக குறைந்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த  எண்ணிக்கை 43,920,451ஆக உள்ளது.   ஒரேநாளில் 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதுவரை தொற்றால்  பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 5,26,110 ஆக அதிகரித்துள்ளது.

corona

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா பாதித்த 18,159 பேர் குணமடைந்த நிலையில் , கொரோனாவிலிருந்து மொத்தம்  குணமடைந்தோர் எண்ணிக்கை  43246829   ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில்  1,47,512 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கடந்த 24 மணி நேரத்தில்  30,42,476 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 202.50 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 3.48% ஆகவு பதிவாகி வருகிறது.