நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 10,256 பேருக்கு கொரோனா

 
india corona

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட சற்று அதிகரித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 10,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று   10,725 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில்  10,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றை விட பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 68  பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  5 லட்சத்து 27 ஆயிரத்து 556 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  13,528 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  4 கோடியே 37 லட்சத்து 70 ஆயிரத்து 913 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது  90,707பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 31.60 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில், இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 211 கோடியாக அதிகரித்துள்ளது.