இந்தியாவில் குறையும் கொரோனா.. 4வது அலை இல்லை என தகவல்!!

 
corona

 இந்தியாவில் மேலும் 4,02,170 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நேற்று முன்தினம் 3,688 பேருக்கும், நேற்று   3,324  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது .  தற்போது மேலும் கொரோனா தினசரி தொற்றானது குறைந்து காணப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 82ஆயிரத்து 345 ஆக அதிகரித்துள்ளது. 

corona

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா தொற்றுக்கு 26 பலியாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் ஏற்பட்ட  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,23, 869 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை கொரோனாவிலிருந்து மொத்தம்  குணமடைந்தோர் எண்ணிக்கை 4, 25, 38, 976ஆக உயர்ந்துள்ளது.  தற்போது வரை இந்தியாவில் 19,500பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் கொரோனாவிற்கு எதிரான ஆயுதமாக பார்க்கப்படும் தடுப்பூசியானது இந்தியாவில் மேலும் 4,02,170 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 189.23கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

india corona
இந்நிலையில் தற்போதைய தொற்று பரவல் 4வது அலை இல்லை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று  அதிகரித்து வருவதை நான்காவது அலையாக கருதக்கூடாது என்றும், மாவட்ட அளவிலேயே தொற்று அதிகரித்து வருவதாகவும், தேசிய அளவில் பெரிய பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் கொரோனா நான்காவது அலை வரக்கூடும் என  விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்த நிலையில் , தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ள இந்தக் கூற்று சற்று நிம்மதி அளிக்கக் கூடியதாக உள்ளது.