இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6000க்கு கீழ் குறைந்தது

 
Covid india

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நீண்ட நாட்களுக்கு பிறகு 6 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,910 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த நில நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று முன் தினம் 7,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று  6,809 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 5,910 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,44,62,445 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 16 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,007 ஆக அதிகரித்துள்ளது.  

covid test

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,034 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,38,80,464 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது  53,974 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் நாட்டில்  32,31,895 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 2,13,52,74,945 ஆக அதிகரித்துள்ளது.  நேற்று ஒரே நாளில் 2,27,313 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 88,73,79,274 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.