இந்தியாவில் மீண்டும் 5000க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

 
Covid india

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நீண்ட நாட்களுக்கு பின்னர் 5000க்கு கீழ் குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 5000க்கு மேல் பதிவாகி வந்த நிலையில், இன்று அதற்கு கீழே குறைந்துள்ளது. நேற்று முன் தினம்  5,076 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று 5,221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  4,45,04,949 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 6 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,185 ஆக அதிகரித்துள்ளது.  

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,975 பேர் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,39,30,417  ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது  46,347 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 215.47 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.