இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா - இன்றைய பாதிப்பு நிலவரம் இதோ!

 
corona

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 268 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பதிப்பு 200 க்கும் கீழாக பதிவாக வந்த  நிலையில்,  இந்த வர தொடக்கத்தில் மீண்டும் 200 ஐ தாண்டியது. நேற்று சற்று குறைவாக 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 268 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 3552- ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 698 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் மொத்தம் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 220 கோடியை தாண்டியுள்ளது.