இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,401 பேருக்கு கொரோனா

 
corona corona

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,401 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று முன் தினம் 2,678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 2,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில் 2,401 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,46,28,828 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 21 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,895 ஆக உயர்ந்தது.
 
கடந்த 24 மணி நேரத்தில்  2,373 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,40,73,308 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 26,625 ஆக  குறைந்துள்ளது. நாட்டில்  இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை  219 கோடியை தாண்டியுள்ளது.