திருப்பதியில் தொடர்ந்து 6-வது மாதமும் ரூ.100 கோடி மேல் காணிக்கை

 
tirupati undiyal

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை தொடர்ந்து ஆறாவது மாதமும் ₹ 100 கோடி  மேல் கிடைத்துள்ளது.

Tirupati - Wikipedia

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து ஆறாவது மாதமாக உண்டியல் காணிக்கை மூலம் ₹ 100 கோடி  மேல் வருவாய் கிடைத்துள்ளது. ஆகஸ்ட் மாதம்  ஒரு நாள் உண்டியல் காணிக்கையாக ரூ.5 கோடிக்கு மேல் காணிக்கைகள் வந்தன. மேலும், ஆகஸ்ட்  மாதம் 22 நாட்களில்  உண்டியல் வருமானம் ₹ 100 கோடி வருவாய் கிடைத்த நிலையில் ஆகஸ்ட் மாதத்திலும்  ₹.140 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 22 லட்சத்து 80 ஆயிரத்து 84 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில் ₹ 140.07 கோடி உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியதன் மூலம் வருவாய் கிடைத்திருப்பது புதிய சாதனையாக பதிவாகியுள்ளது . 

10 லட்சத்து 79 ஆயிரத்து 900 பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை  செய்தனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1.07 கோடி  லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் 23.40 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம்   செய்த நிலையில் 10.97 லட்சம் பக்தர்கள்  தலைமுடி  காணிக்கை செலுத்தினர்.  உண்டியல் மூலம் ₹ 139.33 கோடி செலுத்தினர். ஜூலை மாதத்திலும் 21 நாட்களில் உண்டியலில் ரூ.100 கோடியே 75 லட்சம் பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். ஜூன் மாதத்தில் 23.23 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் ₹ .123.74 கோடி செலுத்தினர். மே மாதத்தில் ₹.130 கோடி காணிக்கை செலுத்தினர்.